"இப்படி ஒரு டிராபிக் போலீஸ்க்காகவே இன்னும் கொஞ்ச நேரம் சிக்னல்ல நிக்கலாம்".. ஏங்க வெச்ச அதிகாரி .. வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம்.

அப்படி நாம் செலவிடும் போது உலகில் நடக்கும் எந்த விஷயங்களை வேண்டுமானாலும் இதன் மூலம் தெரிந்து கொள்ளவும் நம்மால் முடிகிறது.
அது மட்டுமில்லாமல், வித்தியாசமாக தோன்றும் பல விஷயங்கள் அதிகமாக வைரலாகி நெட்டிசன்களால் அதிகம் பகிரப்படும்.
அந்த வகையில், டிராபிக் போலீஸ் ஒருவர் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், எல்ஐசி பஸ் ஸ்டாப் அருகே டிராபிக் போலீஸ் பூத் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பூத் பகுதியில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அந்த பூத்தில் பணியாற்றி வரும் டிராபிக் போலீஸ் ஒருவரின் செயல் தான் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த போலீஸ், தமிழில் மிகவும் ஜாலியாக பேசி அறிவுரைகள் வழங்கியபடி இருக்கிறார். அந்த வழியிலேயே வாகனங்களையும் அவர் வழிநடத்தி வருகிறார். அப்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பேசும் அந்த போலீஸ், "வண்டி எண் 4724-ல இருக்குற தம்பி, நல்ல அழகா சிரிக்குறேடா ராஜா. நிறைய சாங்ஸ் கேளு" என்கிறார்.
தொடர்ந்து, அங்கே நடந்து போகிறவர்களை பத்திரமாக சாலையை கடக்கவும் அந்த போலீஸ் அறிவுறுத்துகிறார். பின்னர் சிக்னல் விலகியதும் இளைஞர் ஹெல்மெட் போடாமலும், மூன்று பேராக ஒரு பைக்கில் போவதையும் அந்த டிராபிக் போலீஸ் கவனித்துள்ளார்.
அதனை கண்டதும், "டேய் பொடியா, ஹெல்மெட் போடுடா.. இதுலாம் ரூல்ஸ், உங்க பாதுகாப்புக்காக தான் சொல்றோம். ஃபாலோ பண்ணுங்க. அப்பா அம்மாவுக்கு தெரியாம பைக் எடுத்துட்டு சுத்துறாங்க" என்கிறார். மேலும், சக வாகன ஓட்டிகளிடம், "முன்னாடி வாங்க, கொஞ்ச நேரத்துல சிக்னல் ஓப்பன் ஆகி விடும்" என்று கூறுகிறார்.
இது தொடர்பாக அப்பகுதியில் இருந்த வாகனஓட்டி வீடியோ எடுத்து வெளியட, தற்போது இந்த டிராபிக் போலீஸ் செயல் தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகியும் வருகிறது.
Cool cop having fun 🤩 pic.twitter.com/J69WddV00t
— CSK (@CSK_myspace) October 20, 2022
Also Read | கோலிய கிண்டல் பண்ணிட்டு.. தினேஷ் கார்த்திக்கிடம் போன தனிஷ்.. தமிழ்லயே சம்பவம் பண்ணி அனுப்பிட்டாரு😅

மற்ற செய்திகள்
