BGM8: கோலியா? தோனியா? MI-ஆ? CSK-ஆ? - பதில்களால் பறக்கவிட்ட VVS லக்ஷ்மன்.. வீடியோ.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிஹைண்ட்வுட்ஸ் விருது வழங்கும் நிகழ்வில், திரைப்பட துறையினரை கௌரவிக்கும் Behindwoods Gold Medals விருதுகள், பல்வேறு துறைகளை சேர்ந்த சமூக சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods gold Icons - Honour of Inspiration, இசை மற்றும் பாடல் துறை சாதனையாளர்களை கவுரவிக்கும் Behindwoods Mic awards மற்றும் Behindwoods விருதுகளின் மற்றுமொரு அங்கமாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) வழங்கும் விழாக்களும் ஏகோபித்த நன்மதிப்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது 8வது Behindwoods Gold Medals விருதுகள் வழங்கும் விழா அண்மையில் நிகழ்ந்தது. 25 ஆயிரம் பார்வையாளர்களுடன் சென்னை தீவுத்திடலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கிரிக்கெட் பிரபலமான விவிஎஸ் லக்ஷ்மனுக்கு "கோல்டன் குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்" எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதன் பின்னர் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அவற்றுள், “சிறந்த கேப்டன் யார் - கோலி சார் அல்லது தோனி சார்?” என்கிற கேள்விக்கு, “இரண்டு பேரும்” என்று பதில் அளித்து அரங்கத்தை கைத்தட்டல்களால் அதிரவைத்தார்.
அடுத்ததாக, “சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் யார் சச்சின் சார் அல்லது சேவாக்..?” என்கிற கேள்விக்கு ஏதேனும் ஒரு பதிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால், சச்சின் என்று பதில் கூறினார். மேலும் 83 உலகக் கோப்பை அல்லது 2011 உலகக் கோப்பை இரண்டுமே முக்கியமானவகி என்றபோதிலும், 1983 உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட்டில் திருப்புமுனையாக இருந்ததாக தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மும்பை இந்தியன்ஸா அல்லது CSK-வா..? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “கடந்த ஆண்டு வரை SRH” என்று நம் லிஸ்ட்லயே இல்லாத பதிலை தந்து அசரவைத்தார். கடைசியில் விவிஎஸ் லஷ்மன் பிஹைண்ட்வுட்ஸின் விருதுடன் பெருமைமிகு வெற்றிநடையை போட்டார்.