VIDEO: “அந்த வீடியோ ஏன் போட்டோம்னா”.. வனிதா - பீட்டர் பால் திருமண CONTROVERSY-க்கு முற்றுப்புள்ளி வைத்த BEHINDWOODS !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jul 20, 2020 09:10 PM

வனிதா விஜயகுமார், பீட்டர் பால், எலிசபெத் ஹெலன் சம்மந்தப்பட்ட சர்ச்சையை நீங்கள் அறிவீர்கள். பிஹைண்ட்வுட்ஸ் உள்பட சமூக ஊடகங்களிலில் வனிதா விஜயகுமார் திருமண விவகாரத்தைத் தொடர்ந்து,  வெளியான செய்தி வீடியோக்களை தொடர்ந்து பார்த்திருப்போம்.             

Behindwoods final stand over Vanitha Vijayakumar marriage controversy

இந்த விவகாரத்தில் நல்லதொரு தீர்வை எட்ட முடியும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது நீர்த்துப் போனதாலும், இந்த விவகார சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருப்பதால்,  இனிமேல் தொடர்ந்து இது சம்மந்தமான எந்த ஒரு வீடியோவையும் பிஹைண்ட்வுட்ஸ் பதிவிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஜல்லிக்கட்டு, கஜாபுயல் நிவாரணம், சுர்ஜித் மரணம், சாத்தான் குளம் சம்பவம், கந்த சஷ்டி கவசம் சர்ச்சை என எல்லாவற்றிலும் தொடர்ந்து மக்களின் குரலாகவே பிஹைண்ட்வுட்ஸ் ஒலிக்கவும், ஒளிபரப்பவும் செய்தது.

ஒரு பிரபலம் என்பதால் வனிதா விஜயகுமார் - பீட்டர்பால் திருமணத்தை ஆரோக்கியமான முறையில் பதிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பீட்டர் பாலின் முன்னாள் மனைவி புகார் அளித்ததால், அது லீகலான விவகாரமாக மாறியது. இதனால் அவர்களை நேர்காணல் செய்தோம். ஆனால் ஒரு சார்பாக இருந்துவிடக் கூடாது என்பதால் வனிதா விஜயகுமாரிடமும் நேர்காணலுக்கு முயற்சித்தோம். ஆனால் அவர்கள் நேர்காணல் அளிக்கவில்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனாலும் இந்த விவகாரம் யாரும் எதிர்பாராத பல திருப்பங்களுடன் தொடர்ந்தது. இதில் 2 குடும்பங்கள் சம்மந்தப்பட்டதாலும், போலீஸ், கேஸ் என்று லீகலாக இந்த விஷயம் போனதாலும், தவறான தகவலுடனும் தரவுடனும் மக்களிடம் இந்த செய்தி போய் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே முனைந்தோம்.

இந்த நிலையில்தான், எலிசபெத் ஹெலனின் கோரிக்கையை ஏற்று லஷ்மி ராமகிருஷ்ணனுடனான இணையவழி நேர்காணலையும், அதைப் பார்த்த பின்பு வனிதா விஜயகுமார் கேட்டுக்கொண்டதற்காக, அவருக்கும் லஷ்மி ராமகிருஷ்ணனுக்குமான இணையவழி நேர்காணலை ஏற்பாடு செய்தோம். இருவரும் பேசி ஒரு புரிதலுக்கு வருவார்கள் என்கிற நோக்கிலேயே அந்த இணையவழி நேர்காணலை ஏற்பாடு செய்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக, தன் சுயக்கட்டுப்பாட்டை மீறி அந்த நேர்காணலில் வனிதா விஜயகுமார் தகாத வார்த்தைகளால் பேசினார்.

முதலில் அந்த வீடியோவை பதிவிட வேண்டாம் என்று யோசித்தோம். ஆனால் வனிதா தன்னுடைய சேனலில் இந்த வீடியோவை பதிவிடுவதாக சொன்னதால், ஒரு தரப்பாக இந்த விவகாரம் போய்விடக் கூடாது என்பதற்காக அந்த இணையவழி நேர்காணலை நாங்கள் வெளியிட்டோம். வனிதா விஜயகுமாரின் திருமண சர்ச்சை விவகாரத்தை பார்த்த எங்களின் பார்வையாளர்களும், சப்ஸ்கிரைபர்களும் ‘இதுபோன்ற ஒரு எதிர்மறையான விவகாரத்தை தொடர்ந்து பதிவிடுவதை தவிர்க்கலாமே?’ என்கிற கோரிக்கையை ஏற்று இம்முடிவை எடுத்துள்ளோம்.

17 வருடங்களாக பிஹைண்ட்வுட்ஸ் செய்திகளை கண்ணியமாக எப்படி சேர்த்தோமே, அப்படிதான் இனியும் தொடரும், நம் பந்தமும் மிக சிறப்பாகவே தொடரும். நன்றி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Behindwoods final stand over Vanitha Vijayakumar marriage controversy | Tamil Nadu News.