BEHINDWOODS GOLD MEDALS 2022 விருது நிகழ்ச்சி : மாஸ் என்ட்ரி கொடுத்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்.. "ஆஹா, இது ராஜநடை ஆச்சே"
முகப்பு > செய்திகள் > தமிழகம்8 ஆவது Behindwoods Gold Medals Awards இன்று மற்றும் நாளை (மே 21 & 22) ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத் திடலில் வைத்து நடைபெறவுள்ளது.

இதன் முதல் நாளான இன்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, திவ்யபாரதி, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இது தவிர இன்னும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் Behindwoods விருது மேடையில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு, பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் அரபிக் குத்து உள்ளிட்ட பல பாடல்களுக்கும் சேர்த்து நடனமாடி இருந்தார். அதே போல, லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டிருந்தது.
கிரிக்கெட் வீரர் கொடுத்த மாஸ் என்ட்ரி
தொடர்ந்து, பல பிரபலங்களும் Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பாவான் ஒருவர் அசத்தலாக என்ட்ரி கொடுத்துள்ள சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதில் முக்கியமானவர் விவிஎஸ் லக்ஷ்மண். இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் லக்ஷ்மண் கலந்து கொண்டுள்ளார். அவர் மாஸான நடையுடன் Behindwoods விருது அரங்கிற்கு என்ட்ரி கொடுக்கும் வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
