"இந்த '2' பேர் தான் என்னோட 'சாய்ஸ்'.." 'இஷான் கிஷான்', 'சூர்யகுமார்' பற்றி 'லட்சுமண்' சொன்ன முக்கியமான 'விஷயம்'... "இது நடந்தா நல்ல இருக்கும்'ல!!"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், டி 20 உலக கோப்பைத் தொடரும் இந்தாண்டு நடைபெறவுள்ளதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்த தொடரில், அறிமுகமான இளம் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) மற்றும் இஷான் கிஷன் (Ishan Kishan) ஆகியோரின் பேட்டிங், அதிக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல, இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்கள் எண்ணிக்கையும் அதிகமுள்ள நிலையில், டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியை எப்படி தேர்வு செய்யப் போகிறார்கள் என்ற குழப்பமும் ரசிகிர்களிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமண் (VVS Laxman), 'டி 20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம் தான். ஏனென்றால், இங்கிலாந்து அணிக்கான டி 20 தொடரில், நிறைய இளம் வீரர்கள், தங்களது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆடிய விதம், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தள்ளது. 15 பேர் கொண்ட, எனது உலக கோப்பை அணியில், நிச்சயம் இவர்கள் இருவரும் இடம்பெறுவார்கள்.
இது மிகவும் அரிதான தேர்வு தான். ஆனால், சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும், நிச்சயம் உலக கோப்பை இந்திய அணிக்கு ஆடத் தகுதியானவர்கள்' என லட்சுமண் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
