"இந்த காலத்து பசங்க எல்லாம் அவருகிட்ட இருந்து தான் கத்துக்கணும்..." வேற 'லெவல்'ங்க அந்த மனுஷன்..." 'இந்திய' வீரரை பாராட்டித் தள்ளிய 'லக்ஷ்மண்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.

இந்த ஐந்து டி 20 போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்துள்ளதையடுத்து, முதல் போட்டி மார்ச் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், வருண் சக்ரவர்த்தி மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகியோருக்கு சர்வதேச அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவிற்கு (Suryakumar Yadav) இந்திய அணியில் இடம் கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம், முப்பது வயதுக்கு மேலாகும் சூர்யகுமார் யாதவ், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்தாலும், இந்திய அணியில் கிடைக்காமல் தவித்து வந்தார்.
மேலும், கடந்த ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கோலி ஆகியோர், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கடும் பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில், பல ஆண்டுகள் பலனுக்கு பிறகு ஒரு வழியாக, சர்வதேச அணியில் ஆட, சூர்யகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் (VVS Laxman), 'இந்திய இளைஞர்களுக்கு சூர்யகுமார் யாதவ் ஒரு முன்னுதாரணம். தற்போதைய இளைஞர்கள் வெகு சீக்கிரமாக பொறுமையை இழக்கிறார்கள். முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடும் அனைவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது.
சூர்யகுமாருக்கு அதிகப் படியான தகுதிகள் மற்றும் திறமைகள் உள்ளன. ஆனால், அவர் பொறுமையாக காத்திருந்து, முதல் தர மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலையின் போது, தனது கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
வாய்ப்புக்கான கதவு திறக்கவில்லை என்றால், உனது ஆட்டத்தின் மூலம் கதவை உடைத்து உள்ளே செல்ல வேண்டும் என எனது பயிற்சியாளர் அடிக்கடி கூறுவார். சூர்யகுமார் அதை தான் செய்து காட்டியுள்ளார். அவர் ப்ளேயிங் 11 ல் இடம்பெறுவாரா என எனக்கு தெரியாது. ஆனால், இந்திய அணிக்கு அவர் தகுதியானவர்' என லக்ஷ்மண் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
