"உச்ச நீதிமன்ற நீதிபதியின் செல்போனை ஒட்டுக்கேட்பதா"?.. பெகாசஸ் விவகாரத்தில்... காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் காட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு சிரிப்பு யோகா சங்கம் மற்றும் அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் ரயில்வே தொழிலாளர் நல சங்கம் சார்பில் கொரோனா காலத்தில் அரும்பணியாற்றிய ரயில்வே தூய்மைப் பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ரயில்வே நிலைய மேலாளர் முத்துவேல் டிப்போ அதிகாரி ஸ்ரீ ராம் குமார், சிரிப்பு யோகா சிறப்பு பிரதிநிதி கண்ணன் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், "குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு கனிம வளங்கள் அதிக அளவில் கொண்டு செல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் வெட்டி எடுத்து கடத்துவதை தடை செய்ய வேண்டும். மக்களை பாதிக்காத வகையில் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பு பகுதியில் விமான நிலையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டம், பெகாசஸ் விவகாரம், மீனவர் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய அரசு விவாதம் செய்யவில்லை. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி செல்போனை ஒட்டுகேட்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. இது குறித்து விவாதிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக தகவல் தர மறுப்பதன் மூலம் அவர்கள் பக்கம் தவறு இருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள்" எனக் கூறினார்.

மற்ற செய்திகள்
