KANGANA RANAUT : “சிலர் போகும் அறைக்கு நான் போவதில்லை.. காரணம் இதுதான்.!” - தன் அம்மா பற்றி கங்கனா உருக்கம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தலைவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடிகை கங்கனா ரனாவத், சந்திரமுகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தல் கங்கனா ரனாவத், பாலிவுட் திரையுலகம் குறித்தும் பேசியிருக்கிறார்.

அதில், திருமண நிகழ்ச்சிகளில் தான் சென்று நடனமாடுவதில்லை என்பதனாலும், சிலர் செல்லும் அறைக்கு தான் செல்வதில்லை என்பதாலும் சினிமா மாஃபியாக்கள் தன்னை ஆணவம் பிடித்தவள் என்று சொல்வதாக தெரிவித்துள்ளார். மேலும் “பணத்துக்காக திருமணங்களில் நடனமாடும் மாஃபியாக்களின் உண்மையான குணநலம் பற்றி தெரியாது!” என்றும் அதனால் தான் அவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம் இதற்கு காரணமாய் இருக்கும் தன் மனநிலையை விளக்கியுள்ள கங்கனா ரனாவத், “என்னுடைய தாயார் இன்றும் விவசாயம் செய்கிறார். ஒருநாளைக்கு 7-8 மணி நேரம் விவசாயத் தோட்டத்தில் வேலை செய்வது என உழைக்கிறார். ஹேங் அவுட் செய்து வெளியில் சாப்பிடுவது, வெளிநாடு போவது, ஷூட்டிங்கை வந்து பார்ப்பது, மும்பையில் தங்கி ஆடம்பரமாக வாழ்வது என எதுவுமே என் அம்மாவுக்கு. நாங்கள் அவரை கட்டாயப்படுத்தும்போது அவர் எங்களுடன் சண்டை போடுவார்.
அப்பேற்பட்ட என் அம்மா, ஒரு இக்கட்டான சூழலிலும் எப்படி வாழ்வது என எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். என் மதிப்பு மற்றும் தர்மத்திற்கு எதிரான வகையில் எதையும் செய்யாமல், யாரிடமும் கையேந்தாமல் வாழ சொல்லித் தந்துள்ளார். எனவே நான் திருமணங்களில் நடனமாட செல்வதில்லை. சிலர் போகும் அறைகளுக்கு நான் போவதில்லை. நான் சம்பாதிக்கும் பணத்தை படம் தயாரிக்க பயன்படுத்துகிறேன். என்னிடம் இப்போது எதுவும் இல்லை என்றாலும், வயல்களில் என் அம்மா வேலை செய்வதை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் எல்லாமே இருப்பதாக கருதுகிறேன்.
இதனால் என்னை பைத்தியக்காரி என்கிறார்கள். இப்போது சொல்லுங்கள்? இது ஆவணமா அல்லது நேர்மையா?” என்று கேட்டு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
