"நான் உங்கள மாதிரி எல்லாம் இல்லங்க.. என்கிட்ட கொஞ்சமாச்சும் மனுஷத் தன்மை இருக்கு.." 'கங்கனா' - 'பதான்' இடையே நடந்த மோதலால் 'பரபரப்பு'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் போர், உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக, பல துறைகளைச் சிறந்த பிரபலங்கள், தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதானும் (Irfan Pathan) தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைச் செய்திருந்தார். அதில், 'உங்களிடம் மனிதநேயம் சிறிதளவு இருந்தால், பாலஸ்தீனில் நடப்பதற்கு ஆதரவு அளிக்க மாட்டீர்கள்' என இஸ்ரேல் நாட்டின் தாக்குதலை விமர்சனம் செய்திருந்தார்.
If you have even slightest of humanity you will not support what’s happening in #Palestine #SaveHumanity
— Irfan Pathan (@IrfanPathan) May 10, 2021
பதானின் பதிவிற்கு, நெட்டிசன்கள் பல முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்தனர். பிரச்சனையின் ஒரு பக்கத்தை மட்டுமே பதான் ஆதரிப்பதாகவும், பாலஸ்தீன் பிரச்சனை குறித்து பேசும் பதான், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்க சம்பவத்துடன் பதானை விமர்சனம் செய்த ஒருவரின் ட்விட்டர் பதிவின் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (Kangana Ranaut), பதானை விமர்சனம் செய்திருந்தார்.
இதனைக் கவனித்த இர்பான் பதான், கங்கனாவின் செயல் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'இந்தியாவை அதிகம் நேசிக்கும் ஒருவரது பார்வையில், நான் இதுவரை செய்த ட்வீட்கள் அனைத்தும், மனித நேயமிக்கதாகவும், நம் நாட்டு மக்களுக்கானதாகவும் தான் தெரியும்.
All My tweets are either 4 humanity or countrymen, from a point of view of a guy who has represented India at d highest level. On d contrary counters I get from ppl like Kangna who’s account get dismissed by spreading hate n some other paid accounts are only about hate. #planned
— Irfan Pathan (@IrfanPathan) May 13, 2021
ஆனால், தவறான செய்திகளை பரப்புவதால் நீக்கப்பட்ட கங்கனாவின் ட்விட்டர் கணக்குகள், வெறுப்பை மட்டுமே மக்களிடையே பரப்புகிறது' என இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், தவறான செய்திகளை பரப்பியதாக, கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.