'தமிழர்கள் இத பண்ண ஆரமிச்சா அப்றம் நிலமையே வேற' .. 'ஜல்லிக்கட்டு அப்போ'... கமல் வெளியிட்ட ‘வேற லெவல்’ வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 16, 2019 02:11 PM

மோடியின் பிறந்த நாளை ஒட்டி பாஜகவின் சேவை வார கொண்டாட்ட விழா நிகழ்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர், இதில் கலந்துகொண்ட அமித் ஷா, நாட்டில் உள்ள அனைவரும் இந்திய அடையாளத்தைப் பேணுவதற்கான வழியில், இந்தியைப் பயின்று ஒரே நாடு, ஒரே மொழியென்று உருவாக வேண்டும் என பேசியிருந்தார்.

Kamalhaasan Replies Amit shah in a Twitter Video goes viral

இதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு ஆதரவு, எதிர்ப்பு, வாத, திரிபுவாதக் கருத்துக்கள் எழும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆவேசமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , ‘1950 ஆண்டு இந்தியா குடியரசு பெற்றபோது, மாநில மொழி, கலாச்சாரத்தில் மத்திய அரசு தலையிடாது என்று செய்துகொடுத்த சத்தியத்தை எந்த ஒரு ஷாவோ, ஒரு சுல்தானோ, ஒரு சாம்ரோட்டோ மாற்றிவிட முடியாது’ என்று கமல் பேசியுள்ளார்.

மேலும், ‘பல ராஜாக்கள் தங்களது ராஜ்ஜியங்களை விட்டுக் கொடுத்ததால் இந்தியா உருவானது; ஆனால் அந்த ராஜாக்கள் ஒருபோதும் தங்களது மொழியையோ கலாச்சாரத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முன்வந்ததில்லை என்பதை இந்தியைத் திணிக்கும் அமித் ஷாக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் கமல் அந்த வீடியோவில் காட்டமாகக் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல், தமிழர்கள் தங்கள் மொழிக்காக போராட தொடங்கினால் அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பெரிதாகிவிடும் என்றும் கமல்ஹாசன் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags : #KAMALHAASAN #AMIT SHAH