வேலை தேடும் இளைஞர்களே...! 'உங்களுக்கு நல்ல செய்தி...' தமிழக அரசு வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > வணிகம்சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
![tn govt announce private sector employment camps in every month tn govt announce private sector employment camps in every month](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/business/tn-govt-announce-private-sector-employment-camps-in-every-month.jpg)
தமிழகத்தில் அவ்வப்போது தனியார்களை வைத்து வேலைவாய்ப்பு முகாம்களை அரசு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்பு முகாம்களை நடத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேலை தேடும் இளைஞர்கள் உரிய வேலையில் சேர முடியும்.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பல துறைகளை சார்ந்த வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.இந்த முகாம்களில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்குபெற உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் அயல்நாட்டு வேலைக்கு விண்ணப்பிக்கவும், திறன் பயிற்சிக்கு பதிவு செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். எனவே, வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்க அனைத்து வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் முன்கூட்டியே தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டை சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் அதிகளவில் முகாம்களில் பங்கேற்று பயன்பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)