‘A SILENT REVOLUTION - THE JOURNEY OF THE SRINIVASAN SERVICES TRUST': சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சமூக பங்களிப்பு; புத்தகம் வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.09.2021) தலைமைச் செயலகத்தில் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் ''A Silent Revolution - The Journey of The Srinivasan Services Trust'' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, இ.ஆ.ப., டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. வேணு சீனிவாசன், புத்தகத்தின் ஆசிரியர் திருமதி ஸ்னிதா பருபுடி, சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் தலைவர் திரு. ஸ்வரன் சிங் இ.ஆ.ப (ஓய்வு), இயக்குநர் (பாதுகாப்பு) திரு. சேகர், இ.கா.ப (ஓய்வு), ஆலோசகர் ஸ்ரீதரன், இ.வ.ப (ஓய்வு), இணை துணைத் தலைவர் (கார்ப்பரேட் ரிலேசன்ஸ்) திரு. சேதுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு பிரிவான 'சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின்' 25 ஆண்டுகால பல்வேறு சமூகப் பங்களிப்புகளை போற்றும் வகையில் ''A Silent Revolution - The Journey of The Srinivasan Services Trust'' என்ற இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
