VIDEO : "பாலு, எங்க போயிட்டே??..." உன்ன பாக்க காத்திருக்கேன்னு 'சொன்னேன்'ல... பேச முடியாமல் கலங்கிய இளையராஜா... கலங்க வைக்கும் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு திரையுலகத்தில் உள்ளவர்கள் மட்டுமில்லாது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் உட்பட பலரை சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள், இசைப்பிரியர்கள் உட்பட பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் முன்னணி இசையமைப்பாளரும், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய நண்பருமான இளையராஜா, இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இளையராஜா, 'பாலு, சீக்கிரம் எழுந்து வா. உன்ன பாக்குறதுக்காக நான் காத்திருக்கேன்னு சொன்னேன். நீ கேக்கல, போயிட்டே. கந்தர்வர்களுக்காக பாட போய்ட்டியா??. இந்த உலகம் ஒரே சூனியமா போச்சி' என அந்த வீடியோவில் கலக்கத்ததுடன் அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் இடையில் இளையராஜா அவர்கள் காத்த மவுனம், அவருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கும் இடையேயான பல ஆண்டு நட்பை நினைத்து உருக்கும் விதத்தில் உள்ளது.
அது மட்டுமில்லாமல், அவரது மறைவை நம்பக் கூட முடியாமல், தன்னால் பேசக் கூட முடியாமல் இளையராஜா கலங்கி நின்றது குறிப்பிடத்தக்கது.
— பரம்பொருள் (@paramporul) September 25, 2020

மற்ற செய்திகள்
