"வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது!".. எஸ்பிபி மறைவு - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாடகர் எஸ்பிபி இன்று (செப்.25) பிற்பகல் 1 மணி அளவில் காலமானார்.
இந்தியத் திரையுலகில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை சுமார் 15 மொழிகளில் பாடியுள்ள எஸ்பிபியின் மறைவுக்கு இந்திய திரையுலகம் மட்டுமல்லாது, பொதுமக்கள் மற்றும் துறை சாராத பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்பிபியின் மறைவுக்கு தனது வருத்தத்தை பதிவு செய்யும் வகையில் #ripspb ...Devastated (ஆழ்ந்த இரங்கல்கள் எஸ்பிபி.. பேரழிவு) என்று பதிவிட்டுள்ளார்.
#ripspb ...Devastated pic.twitter.com/EO55pd648u
— A.R.Rahman (@arrahman) September 25, 2020
அத்துடன் தான் இசை அமைத்த கோச்சடையான்,
The Voice of Victory,Love,Devotion and Joy! #RIPSPBalaSubramanyam pic.twitter.com/nd3H8oRcnO
— A.R.Rahman (@arrahman) September 25, 2020
படத்துக்காக எஸ்பிபி பாடிய பாடலின் ஒரு பகுதியையும் பகிர்ந்துள்ளார்.