“தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட சோழப்பேரரசு - தஞ்சையில் வருகிறது சோழர் அருங்காட்சியகம்” - நிதியமைச்சர்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் இந்த நிதி ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | தமிழ்நாடு : குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹ 1000.. எப்போ இருந்து? வெளியான பட்ஜெட்.!
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இதில் சிறப்பம்சங்களாக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் , அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது, சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படுவது, நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு, வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம், தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு, போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு, இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
Images are subject to © copyright to their respective owners.
இதேபோல், சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படுவது, தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படுவது, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ₹40 கோடி ஒதுக்கீடு, தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு, இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படுவது உள்ளிட்ட அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், “கடல் பல கடந்து, பல போர்களில் வென்று இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பெரும் நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பெருமைக்குரியது சோழப்பேரரசு என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், தமிழரின் கலை, இசை, கட்டடக்கலை, சிற்பக்கலை, கைவினை, நடனம் ஆகிய அனைத்து துறைகளும் சோழர் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்து உலகெங்கும் பரவியதாகவும் குறிப்பிட்டு, உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் அக்காலை கலைப் பொருட்கள் மற்றும் நினைவுச்சினங்களைப் பாதுகாக்க தஞ்சாவூரில் இந்த மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read | குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஏன்.? பட்ஜெட்டில் நிதியமைச்சர் விளக்கம்.

மற்ற செய்திகள்
