புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் மரணம்.. முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல புகைப்பட கலைஞர் ஸ்டாலின் ஜேக்கப் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.
ஸ்டாலின் ஜேக்கப்
புகைப்பட கலைஞரான ஸ்டாலின் ஜேக்கப் உணவு நிறுவனம் ஒன்றின் இணை நிறுவனராகவும் இருந்துவந்தார். இந்நிலையில், இன்று மறைமலை நகர் அருகே சென்றுகொண்டிருந்த போது ஸ்டாலின் ஜேக்கப் விபத்தில் சிக்கியிருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த அவரை செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர் ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இவருடன் பயணித்த விஷ்ணு என்பவரும் விபத்தின் காரணமாக மரணமடைந்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
நேற்று பிறந்தநாளை கொண்டாடிய ஸ்டாலின் ஜேக்கப் இன்று சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இவருடைய மறைவிற்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் இரங்கல்
இதுகுறித்து முதல்வர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,"நேற்றுதான் பிறந்தநாள் கொண்டாடிய நிலையில் கழகத்தின் துடிப்பான சமூக வலைத்தளச் செயல்வீரர் ஸ்டாலின் ஜேக்கப், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆறுதலும் ஆழ்ந்த இரங்கல்களும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
