தமிழ்நாடு : குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹ 1000.. எப்போ இருந்து? வெளியான பட்ஜெட்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Mar 20, 2023 01:19 PM

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

rs 1000 for family head woman in TN Budget 2023

Images are subject to © copyright to their respective owners.

Also Read | எவ்வளவு ட்ரிக்ஸா கோர்த்துவிட்டாரு.. அட்வாண்டேஜ் டாஸ்கில் விசித்ராவுக்கு ஆப்பு வெச்ச காளையன் Cooku With Comali

இதில் சிறப்பம்சங்களாக இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம் , அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது, சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படுவது,  நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு,  வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம், தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு உள்ளிட்ட பல விஷயங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

rs 1000 for family head woman in TN Budget 2023

Images are subject to © copyright to their respective owners.

இதேபோல் போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு, இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு,  சென்னை கிண்டியில் கட்டப்படும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படுவது, தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படுவது, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ₹40 கோடி ஒதுக்கீடு, தமிழ்நாடு பட்ஜெட்டில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ₹18,661 கோடி ஒதுக்கீடு, இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படுவது உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளன.

rs 1000 for family head woman in TN Budget 2023

Images are subject to © copyright to their respective owners.

இதன் ஒரு முக்கிய அம்சமாக 'மகளிர் உரிமைத்தொகை' வழங்கப்படும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஆம், அதன்படி, மகளிர் உரிமைத்தொகை' வழங்கப்படுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 (ஆயிரம் ரூபாய்) ரொக்கப் பணமானது, வரும் நிதியாண்டும் முதல் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும்  என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Also Read | Pandian Stores : விசேஷ வீட்ல வெச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே.! மூர்த்தியிடம் கோபத்தில் கத்திய ஜீவா..

Tags : #MKSTALIN #TN BUDGET 2023 #PAZHANIVEL THIYAGARAJAN #MK STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rs 1000 for family head woman in TN Budget 2023 | Tamil Nadu News.