உடற்பயிற்சியின் போது நடந்த விபரீதம்.. மருத்துவமனையில் பிரிந்த உயிர்.. ஜிம் மாஸ்டருக்கு நேரந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 29, 2023 06:57 PM

சென்னையை சேர்ந்த இளம் ஜிம் பயிற்சியாளர் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

Gym Trainer passed away during Treatment cops under investigation

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இந்த வருஷம் தோனி ஓய்வு பெறுவாரா?".. ரோஹித் ஷர்மா கொடுத்த நச் பதில்..!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகேயுள்ள நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் சபரிமுத்து என்ற ஆகாஷ். 25 வயதான இவர் நடுகுத்தகையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக  பணியாற்றி வந்துள்ளார். மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிகளை பெற்ற ஆகாஷ், கடந்த 26 ஆம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள அதீத உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதனிடையே கடந்த 22ஆம் தேதி ஆகாஷ் உடற்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை தண்டலம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Gym Trainer passed away during Treatment cops under investigation

Images are subject to © copyright to their respective owners.

இதனையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இன்று காலை ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, காவல்துறையினர் ஆகாஷின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாநில அளவிலான ஆணழகன் போட்டிக்கு பயிற்சி பெற்றுவந்த இளைஞர் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "தோனியை முதல்தடவை பார்த்தப்போ.. இப்படித்தான் நெனச்சேன்".. சின்ன தல ரெய்னா சொன்ன விஷயம்.. உருகிய ரசிகர்கள்..!

Tags : #CHENNAI #GYM TRAINER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gym Trainer passed away during Treatment cops under investigation | Tamil Nadu News.