"தோனியை முதல்தடவை பார்த்தப்போ.. இப்படித்தான் நெனச்சேன்".. சின்ன தல ரெய்னா சொன்ன விஷயம்.. உருகிய ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசியிருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. கடந்த 2011 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை புரிந்திருந்தது. இதில், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா, பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல, ஐபிஎல் போட்டி ஆரம்பமானது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த சுரேஷ் ரெய்னா.
பத்து சீசன்களுக்கு மேலாக அந்த அணிக்காக ஆடி உள்ளார். ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலித்த சுரேஷ் ரெய்னாவுக்கு Mr. IPL என்ற பெயரும் உண்டு. அந்த அளவுக்கு ஏராளாமான போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள ரெய்னா, கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருந்தார். இதனையடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக, சென்னை அணி ரெய்னாவை அணியில் இருந்து விடுவித்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners.
ஐபிஎல் 2023
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கி டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெற உள்ளதால் ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
முதல் சந்திப்பு
இந்நிலையில் தோனியுடனான முதல் சந்திப்பு குறித்து பேசியிருக்கிறார் சுரேஷ் ரெய்னா. அப்போது அவர்,"ஜார்க்கண்டில் இருந்து நீண்ட முடி கொண்ட ஒரு வீரரைப் பற்றி நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருந்தோம். இந்த ஒரு நாள், தோனி பாய் ஒரு மூலையில் தனது ரொட்டியையும் பட்டர் சிக்கனையும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவரை பார்த்தோம். கியானு பாய் அவரைப் பார்த்து,' இவரைப்பற்றியா அனைவரும் பேசுகிறார்கள்? நம்முடைய அணிக்கு இவர் அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். அவர் சாப்பிடட்டும்' என கூறினார். ஆனால் போட்டியில் எங்களுடைய பந்து வீச்சாளர்களை சிக்ஸர்களால் திணறடித்துவிட்டார் தோனி" எனக் குறிப்பிட்டுள்ளார் ரெய்னா.
Also Read | "இந்த வருஷம் தோனி ஓய்வு பெறுவாரா?".. ரோஹித் ஷர்மா கொடுத்த நச் பதில்..!