தங்கம் விலை இப்படி எகிறுதே...! 'அப்படின்னு ஃபீல் பண்ணவங்களுக்காக...' - மனச குளிர வைக்குற மாதிரி ஒரு சில் நியூஸ்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளது.

ஊரடங்குக காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது ஏழை, நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு இறுதியில் ரூ.29 ஆயிரம் வரையிலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இந்த ஆண்டு ரூ.43 ஆயிரத்துக்கு மேல் எட்டியது. இதற்கு மேலும் தங்கம் விலை உயரும் என்ற தகவல் மக்கள் மத்தியில் பயத்தை அதிகரிக்கச் செய்தது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.156 குறைந்து, ரூ.4,766க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,900க்கும் விற்பனையாகிறது.

மற்ற செய்திகள்
