உருவானது 'யாஸ்' புயல்...! 'துறைமுகங்களில் 3-ம் எண் 'புயல் எச்சரிக்கை' கூண்டு...! - எந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் நாளை மறுநாள் (26-05-2021) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கிழக்கு-மத்திய வங்கக் கடலில் இரு தினங்களுக்கு முன்பாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துள்ள நிலையில், இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு யாஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. அதோடு வானிலை மையம் இந்த புயல் அதிதீவிர புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளதால், இன்று தமிழகத்தில் உள்ள சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வானிலை மையம் தெரிவித்துள்ள அறிக்கையின் படி, யாஸ் புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், நாளை மறுநாள் கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழக கடலோர மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதோடு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 20 அடி உயரம் வரை அலைகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது
புயலில் தாக்கத்திலிருந்து மக்களை மீட்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் தலைமையில் நடத்தப்பட்டது.
கூடுதலாக வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.