‘புரெவி புயல் தமிழகத்தின் எந்தப் பகுதியில்?’... ‘டிசம்பர் 4-ம் தேதி கரையை கடக்கக் கூடும்’.. ‘வானிலை மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் எப்போது கரையை கடக்கும் என்பது குறித்து வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, வங்கக்கடலில் கன்னியாகுமரியில் இருந்து 860 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்த புரெவிப் புயல் புதன்கிழமை காலையில் புயலாக வலுப்பெற்று, இலங்கையின் திரிகோணமலையை கடக்கும். பின்னர் மன்னார் வளைகுடா பகுதிக்கு வரும் இந்த புயலானது டிசம்பர் 4-ம் தேதி அதிகாலை கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரெவி புயல் கரையை கடக்கும் போது 75 முதல் 95 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
