மொத்தமாக 3000 பேரை.. 'வீட்டுக்கு' அனுப்பும் டாட்டா.. 'கலங்கும்' ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manjula | Nov 19, 2019 03:43 PM

பொருளாதார மந்தநிலை காரணமாக உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் பலவும் கொத்துக்கொத்தாக தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. சமீபத்தில் மொத்தமாக 20 ஆயிரம் ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் வீட்டுக்கு அனுப்பின.

Tata Steel plans to cut up to 3,000 European jobs, read here

இந்தநிலையில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா ஸ்டீல் நிறுவனம் தன்னுடைய ஐரோப்பிய கிளையில் உள்ள 3000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கிறது. வரும் வாரத்தில் இந்த பணிநீக்கம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்திய வணிகத்திற்கு சொந்தமான டாட்டா ஸ்டீல் தனது ஐரோப்பிய வணிகத்தை வலுப்படுத்த, கடந்த ஜூன் மாதத்திலேயே ஒரு அதிரடியான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த நிறுவனத்தின் ஸ்டீல் தயாரித்தல் நெதர்லாந்து மற்றும் வேல்ஸில் எஃகு தயாரித்தல் செயல்பாடுகள் அனைத்தும் ஐரோப்பா வணிகத்தை வலுப்படுத்த அதன் கீழ் கொண்டு வரப்பட்டது. எனினும் அதெல்லாம் கை கொடுக்காத நிலையிலேயே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆலைகள் மூடப்படாது என்றும் நிறுவனத்தை காப்பாற்றவே இப்படி ஆட்குறைப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பா மட்டுமின்றி பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள டாட்டா ஆலைகளிலும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு டச்சு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. மந்தநிலை காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மட்டுமே நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. என்றாலும் ஆட்டோமொபைல் துறையில் நிலவும் மந்தநிலையால் ஆலைகளை டாட்டா நிறுவனம் மூடினாலும் ஆச்சரியமில்லை.

 

Tags : #JOBS