"அதெல்லாமல் நான் சொன்னா வெச்சு செஞ்சிருவாங்க" - டாக்டர் ஷர்மிகா FUN INTERVIEW 😍
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளம் சித்த மருத்துவர் டாக்டர்.ஷர்மிகா பல்வேறு இணையதளங்கள் வாயிலாக தொடர்ச்சியாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் அவர் பேசியது குறித்து சிலர் விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிஹைண்ட்வுட்ஸில் ஜாலியாக தன் காதல், குடும்பம், மருத்துவ துறை அனுபவங்கள் என பலவற்றையும் குறித்து பகிர்ந்துள்ளார். குறிப்பாக இளம் வயதில் மாரடைப்பு, தலை முடி உதிர்தல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு சீரான தூக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு மற்றும் ப்ரஷர் எடுத்துக்கொள்ளாத அளவுக்கான ஓய்வு ஆகியவற்றை பரிந்துரைத்திருந்தார்.
இவரிடம், “ஏன் ஆப்பிள் எ டே கீப்ஸ் தி டாக்டர் அவே என சொல்வார்கள்.. அப்படி ஆப்பிளை சாப்பிட்டால் நமக்கு நோய் வராமல் இருக்குமா? அல்லது வருடம் முழுவதும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ எதாவது உப பொருள் இருக்கா?” என விஜே நிக்கி கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த டாக்டர் ஷர்மிகா, “104 டிகிரி ஜுரம் வந்தால் மருத்துவாரக இருக்கும் எனது தோழிகள் மாத்திரை எழுதி கொடுப்பார்கள். ஆனால் என் வருங்கால கணவர் என்ன ஆனாலும் தூங்கி ரெஸ்ட் எடுத்து, ஹைடிரேட் பண்ணி, நல்ல உணவு சாப்பிட்டு அப்படி தான் தனது உடலை ரெடி பண்ணுவார். ஏனென்றால் அவருக்கு அல்லோபதி ஒத்துக்காது. ஒரு சிலருக்கு சித்த மருத்துவமும் ஒத்துக்காது. நம் உடல் இயற்கையாகவே நோயை எதிர்த்து போரிட அனுமதிக்க வேண்டும். ஆனால் மிகவும் அதிகமானால், கண்டிப்பாக அவசர நிலையில் மருத்துவமனையை நாட வேண்டும். பலருக்கு வலிப்பு வரும் அளவுக்கெல்லாம் போய்விடும்.
365 நாளும் காய்ச்சலே வராமல் இருக்கும் என்கிற சூழல் எல்லாம் இல்லை. நம் உடலில் என்ன தான் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி இருந்தாலும் ஒரு நாள் இல்ல ஒருநாள் நாம் நோஞ்சான் ஆக தான் செய்வோம். அப்போவும் நாம் மருத்துவரை நாடாமல் இருந்துவிட கூடாது. ஆக, வருடம் முழுக்க நம்மை நோயில் இருந்து பாதுகாத்து வைக்கும் மருந்து பொருளே இல்லை. இருக்கு என சொன்னால் வெச்சு செஞ்சிருவாங்க வேண்டாம். 2, 3 முறை காய்ச்சல் வந்து போனால் தான் நமக்கும் அதை எப்படி மேனேஜ் பண்ணுவது என தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.