தாம்பரம் அருகே பஞ்சர் போடும் போது வெடித்த லாரி டயர்... சம்பவ இடத்திலேயே மெக்கானிக் பலி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாம்பரம் அருகே பஞ்சர் ஆன லாரி டயரை சரி செய்து காற்று நிரப்பிக் கொண்டு இருந்தபோது திடீரென டயர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே மெக்கானிக் பலியானார்.

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் பகுதியச் சேர்ந்தவர் மெக்கானிக் பிரகாஷ். 38 வயதாகும் பிரகாஷ் தாம்பரம்- தர்காஸ் பிரதான சாலையில் துர்கா நகரில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் இன்று காலை கடைக்கு தனது 12 வயது மகன் உடன் வந்து வேலையைப் பார்க்கத் தொடங்கி உள்ளார்.
லாரியில் தனியே கழட்டிய டயர் ஒன்றுக்கு பஞ்சர் போடும் வேலையை தொடங்கி உள்ளார் பிரகாஷ். டயருக்கு பஞ்சர் ஒட்டி முடித்ததும் காற்று நிரப்பத் தொடங்கினார். அப்போது திடீரென லாரி டயர் வெடித்ததில் பிரகாஷ் தூக்கி எறியப்பட்டார். அந்த வேகத்தில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் உயிரிழந்துவிட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த தாம்பரம் போலீஸார் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையையும் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சர் போட்டு காற்று நிரப்பும் போது டயர் வெடித்து மெக்கானிக் பலியான காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவு ஆகியுள்ளது.
பஞ்சர் ஒட்டிய டயருக்கு கம்ப்ரஸர் மூலமா காற்று நிரப்பும் போது ஏற்பட்ட காற்றின் அழுத்தம் காரணமாக டயர் வெடித்துள்ளது என விசாரணையில் போலீஸார் கருதுகின்றனர்.

மற்ற செய்திகள்
