'எல்லாரும் கலைஞ்சு போயிருங்க இங்கெல்லாம் நிற்க கூடாது...' 'கையில் வாளுடன் பெண் சாமியார்...' வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 25, 2020 08:27 PM

உத்தரபிரதேச மாநிலத்தில் 144 ஊரடங்கு உத்தரவை மீறி பெண் சாமியார் 100 பக்தர்களுடன் கூடி கையில் வாளுடன் போலீசாரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman who threatened police with sword in hand

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 539  பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, நேற்று 24.03.2020 அன்று இரவு 8 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.  அவ்வுரையில் நேற்று இரவு 12 மணி முதல் 144 ஊரடங்கு நடைமுறை படுத்தப்படும் என்றும், மக்கள் எவ்வாறு தங்களை தற்காத்து கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை அடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒரு சில சலுகைகளுடன் தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தாரியா பகுதியில் தன்னை 'மா ஆதி ஷக்தி' என்று அழைத்துக் கொள்ளும் பெண் சாமியார் ஒருவர் ஆசிரமம் வைத்துள்ளார். இன்று அவரது ஆசிரமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று கூடி உள்ளனர் . தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக் காட்டி போலீசார் அங்குள்ள பக்தர்களை கலைந்து போகுமாறு கூறியுள்ளனர்.

இதை பொருட்படுத்தாத பெண் சாமியார் தான் கையில் வைத்திருந்த வாளை எடுத்து போலீசாரை மிரட்டியுள்ளார். அதன் பின் சிறிய அளவில் லத்தி பிரயோகம் செய்து அங்கிருந்த கூட்டத்தை போலீசார் கலைத்தனர். சிலரை போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Tags : #144