நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள்.. 'புஷ்பா' ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்த டேவிட் வார்னர்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மகளுடன் வாழ்த்து தெரிவித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்து அனைத்து எல்லைகளையும் உடைத்தது. ஒரு சாதாரண மனிதனை உலகளாவிய நாயகனாக இந்த கதை நிலை நிறுத்தியது. இப்போது, ’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் இந்தியத் திரைப்படத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது.
#WhereIsPushpa? என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கான்செப்ட் வீடியோவின் க்ளிம்ப்ஸை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து இரண்டாம் பாகத்தின் மீது ஆர்வமும், அடுத்தடுத்த அப்டேட் தொடர்பான கோரிக்கையும் வந்த வண்ணமே உள்ளது.
’புஷ்பா’ ஒரு திரைப்படம் என்பதைக் காட்டிலும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மூலம் மக்களின் குரலாக, ஒரு பாப்-கலாச்சாரமாக மாறியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முதல் பிரபலங்கள், அரசியல்வாதிகள் வரை அனைவரும் மேடைகளில் ’புஷ்பா’ ரெஃபரன்சை பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வார்னர் அவ்வப்போது புஷ்பாவில் அல்லு அர்ஜுனின் ட்ரேட் மார்க் வசனங்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்தார்.
அதுமட்டும் அல்லாமல் மைதானத்திலும் சில நேரங்களில் புஷ்பா படத்தில் வருவது போல தாடையை தடவி போஸ் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில், அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு டேவிட் வார்னர் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் அவர் புஷ்பா இரண்டாம் பாகத்தினை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார். இறுதியில் தனது மகளுடன் "ஹேப்பி பர்த்டே புஷ்பா" என்கிறார் வார்னர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
