குடும்பத்துடன் பிரபல அரண்மனையில் தங்கியுள்ள அல்லு அர்ஜூன்.. ஒரு நாள் வாடகை மட்டும் இத்தனை லட்சமா? வைரல் போட்டோஸ்
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் அல்லு அர்ஜூன், தமது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரண்மனையில் தங்கியுள்ளார்.

அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் பான்-இந்திய திரைப்படமான 'புஷ்பா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 17 ஆம் நாள் வெளியானது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்தின் முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படக்குழு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான புஷ்பா தி ரூல் படத்தின் போஸ்டரை வெளியிட்டு இருந்தது.
மேலும் இந்த படத்தின் போட்டோ ஷூட்டிங்கும் சமீபத்தில் நடந்தது. நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், போஸ்டர் வடிவமைப்பாளர் டியூனி ஜான், போட்டோகிராபர் அவினாஷ் கவுரிகர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தற்போது புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜூன், அடுத்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. அர்ஜூன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் டி-சீரிஸ் புஷன் குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், தமது குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். புகழ்பெற்ற Six Senses Fort Barwara ஹோட்டலில் குடும்பத்துடன் அல்லு அர்ஜுன் தங்கியுள்ளார். இந்த அரண்மனை ஹோட்டலில் குடும்பத்துடன் 4 நபர்கள் தங்குவதற்கு ஒரு நாள் வாடகையாக 1,37,000 ரூபாய் முதல் 2,11,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்கி கௌஷால் - கத்ரினா கைப் திருமணம் இந்த அரண்மனை ஹோட்டலில் நடந்தது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அரச குடும்பத்துக்கு சொந்தமான இந்த அரண்மனை ஹோட்டல் இந்தியாவில் உள்ள விலையுயர்ந்த தங்கும் விடுதிகளில் ஒன்றாகும்.

மற்ற செய்திகள்
