அவுட்டாகி வெளிய போன நேரத்தில்.. குட்டி ரசிகருக்கு டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. மனம் உருகிய கிரிக்கெட் ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Nov 23, 2022 12:17 AM

டி 20 உலக கோப்பை தொடர் சமீபத்தில் முடிவடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது.

David warner gifts his gloves to young cricket fan

இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இங்கிலாந்து அணி மோதி இருந்தது.

இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை வொயிட் வாஷ் செய்துள்ளது.

மேலும் இந்த தொடரின் கடைசி ஒரு நாள் போட்டி சமீபத்தில் நடைபெற்றிருந்தது. மழை காரணமாக 48 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 355 ரன்கள் எடுத்திருந்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹெட் மற்றும் வார்னர் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்திருந்தனர். ஹெட் 152 ரன்களும், டேவிட் வார்னர் 106 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்திருந்தனர். அதே போல சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து சர்வதேச போட்டியில் சதம் ஒன்றை அடித்து ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தி உள்ளார் டேவிட் வார்னர்.

David warner gifts his gloves to young cricket fan

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்கள் அடிக்க தடுமாறியது. இதனால் 32 வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, 142 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, தொடரையும் கைப்பற்றி உள்ளது.

இந்த நிலையில் டேவிட் வார்னர் அவுட் ஆகி வெளியேறிய சமயத்தில் அவர் செய்த காரியம், கிரிக்கெட் ரசிகர்களை மனம் நெகிழ வைத்துள்ளது.

David warner gifts his gloves to young cricket fan

106 ரன்கள் எடுத்து அவுட்டாகி வெளியே போன வார்னரை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது, ரசிகர்கள் அருகே சென்ற வார்னர், தனது கையில் இருந்த க்ளவுஸை கூட்டத்தில் இருந்த சிறுவன் கையில் கொடுத்து சென்றார். இதனை அந்த சிறுவன் சற்றும் எதிர்பாராத நிலையில், ஆச்சரியத்தில் அவர் ரியாக்ஷன் கொடுத்த படி வேகமாக ஓடி செல்கிறார்.

 

இது தொடர்பான வீடியோவும் அதிகம் வைரலாகி வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வார்னர் செயல் குறித்து கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #DAVID WARNER #ENG VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. David warner gifts his gloves to young cricket fan | Sports News.