"யாரும் இப்டி நடந்துருக்கும்'ன்னு நினைக்கல..." மைதானத்தில் வார்னர் செய்த மிரட்டல் சம்பவம்.. கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jun 30, 2022 11:05 PM

இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி இருந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் செய்த சம்பவம் ஒன்று, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

australia appeals for lbw david warner takes incredible catch

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

முன்னதாக, டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் நடந்து முடிந்திருந்தது. இதில், டி 20 தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒரு நாள் தொடரை இலங்கை அணியும் வென்றிருந்தது.

வார்னர் செய்த அற்புதம்

இதனைத் தொடர்ந்து, தற்போது இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும், தலா ஒரு தொடரை வென்றுள்ளதால், டெஸ்ட் தொடரை யார் வெல்வார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனையடுத்து, முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு நாட்கள் தற்போது முடிவடைந்துள்ளது. அதன் படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 212 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக டிக்வெல்லா 58 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில், நாதன் லயன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி இருந்தார்.

தொடர்ந்து, தங்களின் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்த போது, வார்னர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

எல்லாரும் அவுட் கேட்டுட்டு இருந்தப்போ..

இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, லயனின் பந்து வீச்சை எதிர்கொண்டார். அப்போது, அவர் பேட்டில் பட்ட பந்து, கீப்பர் அருகே சென்று கொண்டிருந்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் LBW அப்பீல் செய்து கொண்டிருக்க, முதல் ஸ்லிப்பில் நின்ற டேவிட் வார்னர், அவுட் அப்பீல் செய்யாமல், பந்தினை கேட்ச் எடுப்பதற்காக டைவ் அடித்தார். அது மட்டுமில்லாமல், ஒற்றைக் கையில் மிக அற்புதமாகவும் கேட்ச் பிடித்து கருணாரத்னேவை அவுட் செய்தார்.

 

ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் LBW அவுட் என கருதிய நிலையில், பேட்டில் பட்டிருக்கலாம் என தனியாளாக கருதிய வார்னர், அதனை அற்புதமாக கேட்ச்சாக மாற்றிய வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்கினை அள்ளி வருகிறது.

Tags : #DAVID WARNER #SL VS AUS #TEST #KARUNARATNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australia appeals for lbw david warner takes incredible catch | Sports News.