என்னது அரெஸ்டா?.. வேறமாரி கஸ்டடி அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு & நாக சைத்தன்யா..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Apr 08, 2023 08:00 PM

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி படத்தின் அப்டேட் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Venkat Prabhu Directed Custody Movie Update Video

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன்  தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இருந்து வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படக்குழுவிடம் இருந்து இன்னும் அதிக கண்டெண்ட்டை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இன்று, படக்குழு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் டீசர் மார்ச் 16 ஆம் தேதி மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும். இதை அறிவித்ததோடு படக்குழு ஒரு சுவாரஸ்யமான க்ளிம்ப்ஸையும் வெளியிட்டுள்ளனர். இது டீசருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஸ்டைலான பின்னணி இசை, பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் படத்தின் பலத்தை மேலும் கூட்டும்படி அமைந்துள்ளது.

இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ப்ரியாமணி பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கினேனியின்  கரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் 'கஸ்டடி'யும் ஒன்று. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார். பவன்குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.கஸ்டடி திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தோன்றும் அப்டேட் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் படத்தின் அப்டேட் குறித்து சைத்தன்யா மற்றும் வெங்கட் பிரபு பேசும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. மேலும், இந்த படத்தின் முதல் சிங்கிள் நாளை (10/04/2023) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Tags : #CUSTODY #VENKAT PRABHU #NAGA CHAITANYA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Venkat Prabhu Directed Custody Movie Update Video | Tamil Nadu News.