கொஞ்சம் கூட பிசிறு இல்ல.. அப்டியே ராஷ்மிகா 'STEP' தான்.. லூட்டி அடித்த 'GRANDPA'.. மீண்டும் சூடு பிடிக்கும் புஷ்பா ஃபீவர்
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் 'புஷ்பா'.

சுகுமார் இயக்கத்தில், பேன் இந்தியா திரைப்படமாக புஷ்பா வெளியாகி இருந்த நிலையில், பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருந்தது.
படத்தின் வெற்றியை போலவே, புஷ்பா படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மற்றும் வசனங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டடித்திருந்தது.
தற்போது, அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்களுக்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடனமாடி வருவதை போல, புஷ்பா படத்தின் பாடல்களுக்கும் ஒரு சமயத்தில் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
கட்டிப்போட்ட புஷ்பா ஃபீவர்
ஸ்ரீவள்ளி பாடலில், அல்லு அர்ஜுனின் ஸ்டெப் ஒன்று அதிக அளவில் பிரபலம் ஆகி இருந்தது. லிரிக் வீடியோவில் கூட, இந்த நடனம் அதிகம் வைரலாகி இருந்தது. இதே போல, 'சாமி சாமி' பாடலில் நடிகை ராஷ்மிகாவின் 'டிரேட்' மார்க் ஸ்டெப் ஒன்றும், ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. ராஷ்மிகா கூட இதனை புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் சமயங்களில், மேடையிலேயே நடனமாடி காட்டினார்.
ரஷ்மிகாவை போலவே, அவருடைய ரசிகர்களும் அச்சு அசலாக அப்படியே ஆடி அசத்தி இருந்தனர். சிறியவர் முதல் வயதானவர்கள் என அனைவரையும் புஷ்பா ஃபீவர் கட்டிப் போட்டிருந்தது. இது தவிர, புஷ்பா படத்தின் மற்றொரு பாடலான சமந்தாவின் 'ஓ அண்டவா மாமா', எந்த அளவிற்கு ரசிகர்களை கிறங்கடித்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
'சாமி சாமி' வந்ததும் டான்ஸ்
இந்நிலையில், புஷ்பா படத்தின் பாடலுக்கு வயதான ஒருவர் நடனமாடும் வீடியோ, இணையத்தில் மீண்டும் புஷ்பா ஃபீவரை உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில், ஏதோ ஒரு பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வந்துள்ளது. அப்போது, பாடகர்கள் மேடையில் புஷ்பா படத்தில் வரும் 'சாமி சாமி' பாடலை பாட, அதனை மேடை அருகே நின்று பார்த்து கொண்டு நிற்கும் முதியவர், சரியாக சாமி சாமி என்ற வார்த்தை வந்தவுடன், ராஷ்மிகா போடும் அதே ஸ்டெப்பை அவரும் போடுகிறார்.
இதனை அங்கிருந்தவர்கள் மட்டுமில்லாமல், மேடையில் பாடுபவர்களும் கண்டு உற்சாகம் அடைகின்றனர். அவர்களும் சேர்ந்து நடனமாடிக் கொண்டே பாட, இது தொடர்பான வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
