“ஆபத்தான இடம் இந்த உலகம்.. திரும்பவும் பிரஸ் காரங்கள சந்திப்பேனு நெனைக்கல!”.. துப்பாக்கிச் சூட்டின் திக்திக் நிமிடங்களுக்கு பிறகு டிரம்ப்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பானது. காரணம் வெள்ளை மாளிகை அருகே நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூடுதான்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனே டிரம்ப்பின் பாதுகாவலர் ஒருவர் அவரின் காதுகளில் எதையோ கிசுகிசுக்க, பின்னர் அங்கிருந்து ட்ரம்ப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் பேசிய டிரம்ப், “துரதிர்ஷ்டவசமாக, உலகம் இப்படியானதாகவே இருக்கிறது, எப்போதும் ஆபத்தான ஓர் இடமாகவே உலகம் இருக்கிறது. தனித்த சிறப்புடைய இடமாக இந்த உலகம் இருப்பதாக நான் கருதவில்லை.
கடந்த நூற்றாண்டுகளை புரட்டினால், வாழ்வதற்கு அச்சமூட்டும், ஆபத்தான பகுதியாக உலகம் இருப்பதை காணமுடிகிறது. தொடர்ந்து குறிப்பிட்ட காலம் வரையில் இப்படிதான் இருக்கும் போலிருக்கிறது.
ஆனால் உயர்மட்ட பயிற்சி பெற்ற மிகச்சிறப்பான என் பாதுகாவலர்கள் என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அவர்கள் நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஒருவர் மட்டுமே ஆயுதத்துடன் வந்திருந்தார்”என்று பேசினார்.
மேலும் பேசிய டிரம்ப், மீண்டும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று தான் நினைக்கவில்லை எனவும் கூறினார்.