“அந்த மனுசனுக்கு 3 மாசத்துக்கு முன்னாடியே எல்லாம் தெரியும்ங்க!”.. கிடுகிடுக்கவைக்கும் தகவலை வெளியிட்ட டிரம்பின் பொருளாதார அதிகாரி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 19, 2020 03:18 PM

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு அந்நாட்டில் 35 லட்சம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  சர்வதேச அளவில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.

trump knows about corona virus before 3 months it affects US

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் பரவிய இந்த கொரோனா வைரசால் ஒரு சிலர் பாதிப்படைந்த நிலையில், டிசம்பர் இறுதியில்தான் இந்த வைரஸ் தொற்று பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதே சமயம், கொரோனா தொற்று டிசம்பரில் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், அது வெளியே தெரிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இதுபற்றி எச்சரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே டிரம்பின் நிர்வாகத்தில் பொருளாதார ஆலோசகர்கள் குழுவின் பொறுப்பு தலைவராக 3 ஆண்டு பதவி வகித்து வந்த தோடாஸ் பிலிப்சனின் தலைமையிலான குழு, 41 பக்க அறிக்கை ஒன்றை கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தது. 5 லட்சம் அமெரிக்கர்களை பலி வாங்க கூடிய பெருந்தொற்று நோய் பின்னாளில் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளதாகவும், அமெரிக்க பொருளாதாரத்தில் 3,700 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பிறகே அமெரிக்காவுக்குள் கொரோனா நுழைந்ததாகவும், ஆனால் அமெரிக்கா எச்சரிக்கையுடன் இல்லாததால், ஊரடங்கையே தாமதமாக அறிவித்தது. அதன் பிறகு பிலிப்சன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியில் இருந்து விலகியதுடன்,  சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணிக்கு மீண்டும் திரும்பினார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்புக்கு ஆளான இவர், கொரோனா வைரசை முன்பே கண்டறிவது சாத்தியமில்லாதது என்றும் தடுக்க முடியாது என்றும் டிரம்ப் கூறிவந்த நிலையில், பிலிப்சனின் முன்பே எச்சரிக்கை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பேசிய பிலிப்சன், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் வழியே  கொரோனா பாதிப்புகளை குறைக்க முடியும் என்கிற தலைப்பிலான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகளிடம் கடந்த செப்டம்பரிலேயே அளித்ததாகவும், இதுபற்றி வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Trump knows about corona virus before 3 months it affects US | World News.