VIDEO: இங்க ‘முதலை’ கெடக்குன்னு சொல்லுவாங்க.. ஆனா இப்போதான் நேர்ல பாக்கோம்.. தீயாய் பரவும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாபநாசம் அணையின் கரையில் முதலை படுத்துக் கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையாக பாபநாசம் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் முதலைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது. அணையில் இருக்கும் முதலைகள் அவ்வப்போது கரையோரங்களில் சுற்றி திரிவதை சுற்றுலாப் பயணிகள் பலர் பார்த்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் அணையின் நீர் மட்டம் குறைந்து காணப்படும் போது முதலை தண்ணீரில் கிடைப்பதையும் பலர் பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம், தற்போது 138 அடியாக உள்ளது. சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் பாபநாசம் அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அணையின் நீர்மட்ட அளவுகோல் இருக்கும் இடத்தில் கரையில் சுமார் 6 அடி நீளமுள்ள முதலில் படுத்துக் கிடந்துள்ளது.
உடனே அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிலர், ஒரு சிறிய கட்டையை தூக்கி இருந்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக முதலை தண்ணீருக்குள் சென்று விட்டது. இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சூழலில் அணையின் அருகில் யாரும் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.