'சென்னை'யில் அதிகரிக்கும் கொரோனா... நாளைக்குள் 'அண்ணா' பல்கலைக்கழகத்தை ஒப்படையுங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணா பல்கலைக்கழகத்தை ஒப்படைக்குமாறு துணைவேந்தர் சூரப்பாவுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
அதில் வருகின்ற ஜூன் 20-ம் தேதிக்குள்(நாளை) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக விடுதிகளில் மாணவர்கள் தங்கியிருந்தால் அவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்படும் மையமாக அண்ணா பல்கலைக்கழகம் மாறுவதால் அதற்கான செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகு எப்படி அண்ணா பல்கலைக்கழகம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அதே நிலையில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மிகப்பெரிய வளாகம் என்பதால் அங்கு நோயாளிகளை தங்கவைக்க வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தை கொரோனா மையமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.