'5 நாட்களில் குணமாகும் கொரோனா நோயாளிகள்'... 'இந்த சிகிச்சையை விரிவுபடுத்தலாம்'... தமிழக அரசு அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துக் கொண்டே செல்கிறது. பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் 3 அரசு மருத்துவமனைகள் மற்றும் அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அலோபதி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவச் சிகிச்சை முறையை விரிவுபடுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வளசரவாக்கத்தில் இயங்கி வரும் சிகிச்சை மையம் மற்றும் புழல் சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்குத் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் சித்த மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் நாட்களுக்குள்ளாகவே குணமடைந்துள்ளனர். சித்த மருத்துவச் சிகிச்சையால் 183 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து சென்னையில் இயங்கிவரும் அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களிலும் சித்த மருத்துவச் சிகிச்சை அளிக்கலாம் எனத் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் ஆர்.மீனாகுமாரி, ''கொரோனாவுக்கு வழங்கப்படும் மருத்துகளுக்கான மூலப்பொருட்கள், அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கக்கூடியது. இதனால் அவை தட்டுப்பாடின்றி மலிவாகக் கிடைக்கும். இந்த சிகிச்சை மூலம், நோயாளிகள் 5 முதல்7 நாட்களுக்குள் குணமாகிவிடுகின்றனர்.
ஏற்கனவே சென்னையில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களில், சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூடுதலாக சில சித்த மருந்துகளை வழங்கி சித்த மருத்துவச் சிகிச்சை அளிக்க அரசுக்குத் தெரிவித்திருக்கிறோம். அதுதொடர்பான கூட்டம் நடைபெற்ற நிலையில், அனைவருக்கும் சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது எனத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எது மாதிரியான மருந்துகளை வழங்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்யப்பட்டது'' என அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
