"இந்த வேலைய நம்பிதானே இந்த மாதிரி அபார்ட்மெண்ட்ல இருந்தோம்!".. சம்பள குறைப்பு, வேலை நீக்கத்தால், சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு நேரும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை கட்டாயமாக வேலையை விட்டு நீக்கம் செய்கின்றன என்பதை ஆங்காங்கே வரும் தகவல்கள் பலவும் உறுதிப்படுத்தின.
இதனால் சற்றே சொகுசான அபார்ட்மெண்ட்களில் வசித்து வந்த ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள் பலரும் வீடுகளை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஆயிரக் கணக்கான ஐடி ஊழியர்களின் கட்டாய வேலை நீக்கம், 25 % வரையிலான சம்பள குறைப்பு உள்ளிட்டவற்றால், சென்னை ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர், மகாபலிபுரம், அசோக் நகர் பகுதிகளில் அபார்ட்மெண்ட்களில் வசிக்கும் ஐ.டி ஊழியர்கள் அபார்ட்மெண்ட் வாடகைகளை கட்ட முடியாமல் வாரத்துக்கு 100 பேராவது தங்கள் அபார்ட்மெண்ட்களை காலி செய்வதாக குறிப்பிடுகின்றனர்.
மத்திய சென்னையைப் பொருத்தவரை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பலர் இவ்வாறு காலி செய்கின்றனர். இதர பகுதிகளில் வீட்டு ஓனர்கள், வாடகையை குறைத்துக்கொள்ளவும் சம்மதம் தெரிவிக்காததால் ஐடி ஊழியர்கள் அபார்ட்மெண்ட்களை காலி செய்து வருகின்றனர்.