"பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க!".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (ஜூன் 19) முதல் ஜனவரி ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் வங்கி நிறுவனங்களுக்கான சேவைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்றியமையாத சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு வங்கி கிளைகள் பிற்பகல் 2 மணி வரை செயலாற்றும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி முழு ஊரடங்கு அமலில் இருக்கும் இடங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 33 சதவீத ஊழியர்களுடன் வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இந்த நாட்களிலும் இன்றியமையாச் சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பொதுமக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளாது.
தவிர, ஜூன் 29, 30 உள்ளிட்ட தேதிகளில் வழக்கமான பணி நேரங்களில் வங்கிகள் செயல்படும் என்றும், பிற ஏடிஎம் மற்றும் பணம் செலுத்தும் எந்திரங்களின் சேவைகள் எப்போதும் போல் இருக்கு ம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
