'அதிகரிக்கும் கொரோனா'... 'ரொம்ப எச்சரிக்கையா இருங்க மக்களே'... 'மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்'... தமிழக அரசு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
![Corona : TN Govt to impose fine for not wearing mask Corona : TN Govt to impose fine for not wearing mask](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/corona-tn-govt-to-impose-fine-for-not-wearing-mask.jpeg)
தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில், டந்த சில நாட்களாகத் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகச் சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இதனால் தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முகக்கவசம் அணியவில்லை அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி “பொது இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய்த் தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களைக் கடந்த ஆண்டு போல் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)