‘மறுபடியும் அதிகரிக்கும் கொரோனா தொற்று’!.. வேக வேகமாக லாக்டவுனை அறிவித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பின்லாந்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் பின்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மறுபடியும் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை நாடாளுமன்றம் உட்பட அனைத்து இடங்களும் மூடப்படும் என்றும், அத்தியாவசிய தேவை இன்றி யாரும் வெளியே வரக்கூடாது என்றும் பின்லாந்து அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 7,353 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : #CORONAVIRUS #CORONA #LOCKDOWN #FINLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Finland declares state of emergency over Coronavirus | World News.