‘ஹாலோ ஸ்டாலின் தாத்தா’!.. சுட்டிக்குழந்தை அனுப்பிய ஒரே ஒரு லெட்டர்.. அடுத்தடுத்து ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த முதல்வர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 10, 2021 09:52 AM

சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கொரோனோ நிதியாக வழங்கிய சிறுவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்து அசத்தியுள்ளார்.

CM MK Stalin surprises boy who donated to corona relief fund

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் இளங்கோ-தீபா தம்பதியினர். இவர்களது மகன் ஹரீஸ்வர்மன் (7 வயது). ஹரீஸ்வர்மன், தான் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து 1000 ரூபாயை கொரோனோ நிவாரண நிதியாக அனுப்பி வைத்தான்.

CM MK Stalin surprises boy who donated to corona relief fund

மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும் சிறுவன் ஹரீஸ்வர்மன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தான். இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறுவனின் செயலை பாராட்டும் விதமாக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி மூலம் சிறுவனுக்கு ஒரு புதிய சைக்கிளை வாங்கி பரிசாக கொடுத்தார்.

CM MK Stalin surprises boy who donated to corona relief fund

கொரோனா நிவாரண நிதி வழங்கியது குறித்து தெரித்த சிறுவன் ஹரீஸ்வர்மன்,‘ரெண்டு வருசமா சைக்கிள் வாங்க கொஞ்சம் கொஞ்சமா உண்டியல்ல சேத்து வச்சிருந்த பணத்த, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்கலாமான்னு அப்பாகிட்ட கேட்டேன். அப்பா சரின்னு சொன்னாங்க. உடனே உண்டில்ல இருந்த பணத்த ஸ்டாலின் தாத்தாவிற்கு அனுப்பினேன்’ எனக் கூறினான்.

CM MK Stalin surprises boy who donated to corona relief fund

இந்த நிலையில் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுவன் ஹரீஸ்வர்மனுக்கு முதல்வர் சர்ப்ரைஸ் கொடுத்தார். அப்போது, சிறுவன் படிப்பு குறித்து விசாரித்த முதல்வர், சைக்கிள் பிடித்துள்ளா என கேட்டார்.  உடனே முதல்வர் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த சிறுவன், தமக்கு சைக்கிள் வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தான். சிறுவனின் செயலைப் பாராட்டும் விதமாக முதல்வர் சைக்கிள் வாங்கி கொடுத்துடன், செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MKSTALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. CM MK Stalin surprises boy who donated to corona relief fund | Tamil Nadu News.