"யாரு சாமி இந்த 'பையன்'??.. கொஞ்சம் கூட பயமில்லாம, எப்படி எல்லாம் 'பேட்டிங்' பண்றாப்ல!." 'குட்டி' பேட்ஸ்மேனின் 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | May 09, 2021 04:41 PM

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரையில், அதனைக் கண்டு களிக்க, உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. அதிலும் குறிப்பாக, இந்தியாவில், சிறு வயது தொடங்கி வயது முதிர்ந்தவர்கள் வரை கிரிக்கெட் போட்டிகளை ரசிப்பவர்கள் ஏராளம்.

video featuring kid batting with stump gone viral on social media

கிரிக்கெட் என்பதை ஒரு விளையாட்டாக மட்டும் கடந்து விடாமல், தங்களது வாழ்வின் ஒரு அங்கமாக நினைப்பவர்களும் அதிகமுண்டு. இந்நிலையில், சிறுவன் ஒருவன், கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

சுமார் 6 முதல் 7 வயது வரை மதிக்கத்தக்க அந்த சிறுவன், தனக்கு வரும் பந்துகளை அனுபவம் வாய்ந்த வீரர் போல அடிக்கிறார். டிரைவ், ஸ்கூப், ஸ்வீப் உள்ளிட்ட தேர்ந்த கிரிக்கெட் ஷாட்களை, எந்தவித பதற்றமும் இல்லாமல் மிகவும் திறமையுடன் கையாளுகிறார்.

கிரிக்கெட் ரசிகர்களை திரும்ப திரும்ப பார்க்கத் தூண்டும் இந்த வீடியோவின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், கிரிக்கெட் பேட் எதையும் பயன்படுத்தாமல், ஸ்டம்ப் ஒன்றைக் கொண்டு தான் பேட்டிங் செய்கிறார்.

 

சிறுவன் ஆடும் இடம், சிமெண்ட் தரை என்பதால், சற்று பவுன்சராக வரும் பந்துகளைக் கூட சர்வ சாதாரணமாக அடித்து ஆடுகிறார். 'தி கிரேட் கிரிக்கெட்ட்ர்' (The Grade Cricketer) என்ற ட்விட்டர் பக்கம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

சர்வ சாதாரணமாக உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஷாட்களை அடித்து ஆடும் சிறுவனின் வீடியோ, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில், அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

Tags : #CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Video featuring kid batting with stump gone viral on social media | Sports News.