'இதுதான் உண்மையான லாக்டவுன்!'.. ‘எப்படி பாத்தாலும் கொரோனா உள்ள வரவே முடியாது!’.. பிரிட்டன் தம்பதியின் ‘வியப்பான காரியம்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றுநோயை அண்ட விடாமல் இருக்க மின்சாரம், எரிவாயு அல்லது ஓடும் நீர் இல்லாத ஒரு சிறிய தீவின் ஒரே குடியிருப்பாளர்களாக ஒரு பிரிட்டிஷ் தம்பதியினர் மாறியுள்ளனர்.
இங்கிலாந்தில் லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, மார்ச் 14 அன்று அயர்லாந்தில் உள்ள கவுண்டி டொனேகலின் மேற்கு கடற்கரையில் தொலைவில் உள்ள ஓவி தீவுக்குதான் லூக்கா மற்றும் சாரா ஃபிளனகன் குடிபெயர்ந்தனர். இந்த தம்பதியினருக்கு வரவிருந்த கொரோனா தொற்றுநோயைப் பற்றி எதுவும் தெரியாது, மேலும் 300 ஏக்கர் பாறை நிலப்பரப்பில் அவர்கள் தங்கியிருப்பதன் நோக்கம் வாழ்க்கையை மெதுவான வேகத்தில், 12 மாதங்களை சிலாகித்து வாழ்வதற்காக எடுத்துக் கொள்வதாகும்.
இந்த தீவில், கடற்கரை நடனம், மீன்பிடிக்கச் செல்வதுமாக லூக்கா, 34, மற்றும் சாரா, 36, தங்களை எளிமையாக தனிமைப்படுத்திக் கொண்டு கோவிட் -19 இலிருந்து தங்களைத் தெளிவாக தற்காத்து வைத்திருக்க முடிந்தது. இந்த சிறிய தீவில் தனிமைப் படுத்தப் பட்டிருக்கும் போது நடக்கும் எல்லாவற்றையும் மிகவும் வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் நினைத்துப் பார்க்க முடிகிறது என்றும், சமூக விலகலை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் லூக்கா கூறியுள்ளார்.
இந்த தீவுக்கும் முக்கால் மைல் தொலைவில் உள்ள மற்றொரு தீவுக்கு செல்ல, இந்த தம்பதியினருக்கும் இருக்கும் ஒரே வழி, ஒரு பாலத்தின் மூலம் பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள வழிதான். லூக்காவும் சாராவும் முதலில் லீட்ஸ், வெஸ்ட் யார்க்ஸில் இருந்து வந்தவர்கள், ஆனால் அயர்லாந்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தபோது ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் வாழ்ந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.