VIDEO: ‘அய்யா ஆசீர்வாதம் பண்ணுங்க’!.. சட்டென காலில் விழுந்த மணமக்கள்.. அடுத்த நொடியே முதல்வர் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புயல் பாதிப்புகளை ஆய்வு சென்ற முதல்வர் பழனிசாமியிடம் புதுமண தம்பதி ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிவர் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. புயல் கரையை கடக்கும்போது வீசிய பலத்த காற்றால் வாழை, நெற்பயிர் உள்ளிட்டவைகள் சேதமடைந்தன. இதனால் நேற்று கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட முதல்வர் பழனிசாமி சென்றார். அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதனை அடுத்து காரில் முதல்வர் பழனிசாமி சென்றுகொண்டு இருந்தார். அப்போது சாலையோரமாக நின்றுகொண்டிருந்த புதிதாக கல்யாணமான தம்பதி, முதல்வரை பார்த்து ‘ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போங்கய்யா’ என கேட்டனர். உடனே மணமக்களை வாழ்த்த காரிலிருந்து முதல்வர் இறங்கினார்.
முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி @CMOTamilNadu அவர்கள் செல்லும் வழியில் மணமக்களை சந்தித்தவுடன் தனது வாகனத்தைவிட்டு இறங்கி மனதார வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.#களத்தில்EPS pic.twitter.com/lLDFpDYjFO
— Sivanesan J AIADMK (@SivanesanJ_ADMK) November 26, 2020
அப்போது ஆசீர்வாதம் வாங்க முதல்வரின் காலில் மணமக்கள் சட்டென விழுந்தனர். இதனை சற்றும் எதிர்பாக்காத முதல்வர் உடனே தனது காலணிகளை கழற்றிவிட்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆசிர்வாதம் கேட்ட மணமக்களை காலில் உள்ள செருப்பை கழட்டி விட்டு வாழ்த்துகின்ற இந்த நல்ல மனம் தான் மாண்புமிகு அண்ணன் @cmotamilnadu #எடப்பாடியார் அவர்களை மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடிக்க செய்து இருக்கிறது.🙏 pic.twitter.com/uURXAxtcxs
— Jananii Sathishkumar (@JananiiSathish) November 26, 2020