VIDEO : "'தெய்வம்'யா இந்த 'மனுஷன்'... உசுர குடுத்து வேல பாக்குறாரு..." உயிரை 'பணயம்' வைத்து பணிபுரிந்த 'மின்' ஊழியருக்கு குவியும் 'பாராட்டு'க்கள்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த சில தினங்களுக்கு முன் நிவர் புயல் காரணமாக சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்ககை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் புயல் கரையை கடந்தது.
இதன் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், புயல் அறிவிப்பு வெளியானது முதலே பாதிப்பு ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, புயல் கரையைக் கடந்த பின்னர், பல இடங்களில் மின்சாரம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்ப ஒயர் ஒன்றின் மீது மாட்டிக் கொண்டிருந்த மரக்கிளை ஒன்றை மின்துறை ஊழியர் ஒருவர் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் மின்கம்பம் மீது ஏறி அதனை அப்புறப்படுத்தினார். போதிய பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் இல்லாமல் உயிரை பணயம் வைத்து அந்த ஊழியர் தன்னந்தனி ஆளாக பணியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் அந்த ஊழியருக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் சிலர், அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆபத்தான சமயங்களில் ஆபத்தான பணியில் ஈடுபட்ட அந்த மின் ஊழியருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இவரை போன்று மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பல பகுதிகளில் மின் ஊழியர்கள் மிகவும் ஆபத்தான சூழலில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெய்வம் யா..இந்த மனுஷன். கண்டவங்களுக்கு விருது கொடுக்குறாங்க...இப்படிப்பட்ட ஆட்களுக்கு கொடுங்கப்பா!!!
மின்சார வாரிய ஊழியர். 🙏🙏🙏
நன்றி: @iamSri_Sri for the video
— RaviKumar V 🇮🇳 (@raaga31280) November 26, 2020