சென்னை கடற்கரை மின்சார ரயில் விபத்துக்கு காரணம் என்ன..? வெளியான பரபரப்பு தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே பணிமனையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக மின்சார ரயில், கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடுப்பு மீது மோதி, நடைமேடை மீது ஏறியதுடன், நடைமேடைக்கு அருகில் இருந்த கடையின் சுவற்றின் மீது மோதி நின்றது. உடனே என்ஜின் பெட்டியில் இருந்து ஓட்டுநர் வெளியே குதித்து உயிர் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். ரயில் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், பயணிகள் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதனால் சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து உடனடியாக மாற்று நடைமேடையில் இருந்து ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. விபத்துக்குள்ளான மின்சார ரயிலில் எஞ்சினையும் சேர்த்து மொத்தம் 12 பெட்டிகள் இருந்தன. அதில் 10 பெட்டிகள் உடனடியாக பிரித்து அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மாலை 6 மணியளவில் நடைமேடை மோதி நின்ற என்ஜின் பெட்டியும் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய கண்காணிப்பாளர் துர்கா ராம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் பவித்திரன் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஓட்டுநர் பவித்திரனிடம் நடத்திய தொடர் விசாரணையில், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8