‘தன் காதலனை காதலித்த வேறொரு பெண்?’.. விஷயம் தெரிஞ்சு முன்னாள் காதலனுடன் சேர்ந்து பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் காதல் விவகாரத்தில் முன்னாள் காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் மற்றொரு பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயில் பகுதியில் லேகா (வயது 30) என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு நேற்று பிற்பகலில் ஒருவர் வந்து கதவை தட்டியுள்ளார். அப்போது வீட்டில் லேகா மற்றும் அவருடைய தாய் ஆகியோர் இருந்துள்ளனர். அவர்கள் கதவை திறந்து பார்த்த போது வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்துள்ளார்
அப்போது லேகாவை பார்த்தவுடன் அந்தப் பெண் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் வீசியுள்ளார். இதில் தாய், மகள் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லேகா மற்றும் அவருடைய தாயை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், லேகா மீது ஆசிட் வீசிய பெண் போரூர் மங்களா நகரை சேர்ந்த ஐஸ்வர்யா (வயது 37) என்பது தெரியவந்தது. ஐஸ்வர்யாவுடன் நேற்று கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (வயது 36) என்ற நபரும் வந்துள்ளார். தீனதயாளனை ஐஸ்வர்யா சில மாதங்களுக்கு முன்பாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தற்போது ஐஸ்வர்யா, பார்த்திபன் என்ற நபரை காதலித்து வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் பார்த்திபனை லேகாவும் காதலித்து வருவதாக தீனதயாளன் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா, லேகா வீட்டிற்கு சென்று அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். தன் காதலரை வேறொரு பெண் காதலிக்கிறார் என்பதை அறிந்த பெண் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
