‘செம சர்ஃப்ரைஸ்’.. CSK இளம் வீரருக்கு கல்யாணம்.. வெளியான க்யூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஹரி நிஷாந்த் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Also Read | ‘கிரேட் எஸ்கேப் ஆன ரிஷப் பந்த்’.. இல்லன்னா கேப்டனா முதல் மேட்சே மோசமான ரெக்கார்ட்டா மாறியிருக்கும்..!
தமிழ்நாடு கிரிக்கெட் வீரரான ஹரி நிஷாந்த், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ஹரி நிஷாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் மொத்தம் 246 ரன்கள் அடித்தார். குறிப்பாக இறுதி போட்டியில் 35 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில் ஹரி நிஷாந்துக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. அந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த சூழலில் ரசிகர்கள் பலரும் ஹரி நிஷாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹரி நிஷாந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. அணியில் முன்னணி வீரர்கள் அதிகமாக இருப்பதால் ஹரி நிஷாந்த்துக்கு இதுவரை ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hari got hitched! 😍 Here's to the one where we pronounce you “Super Couple!“ 🥳💛#WhistlePodu #Yellove 🦁 @harinishaanth16 pic.twitter.com/J8uh9BVrbh
— Chennai Super Kings (@ChennaiIPL) June 10, 2022
Also Read | கடைசி ஓவர்ல ஏன் பாண்ட்யா அப்படி பண்ணார்..? தினேஷ் கார்த்திக் அதிருப்தி.. கடுப்பான நெட்டிசன்கள்..!

மற்ற செய்திகள்
