பேட்டிங் பண்றதுக்கு முன்னாடி தோனி சொன்ன ‘ஒரு’ அட்வைஸ்.. ‘ஆட்டநாயகன்’ விருது வாங்கிய CSK வீரர் சொன்ன சீக்ரெட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனி கூறிய அறிவுரை குறித்து சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே 87 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 41 ரன்களும், சிவம் துபே 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. மேலும் டெவோன் கான்வேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இப்போட்டியில் பேட்டிங் செய்வதற்கு முன் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறிய அறிவுரை பெரிதும் உதவியதாக டெவோன் கான்வே கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ருதுராஜ் கெய்க்வாட் உடன் மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்ததில் மகிழ்ச்சி. அவர் அதிரடியாக விளையாடி எனது வேலையை எளிதாக்கினார். இந்த பாராட்டுக்களை தோனிக்கு தான் போய் சேர வேண்டும்.
ஏனென்றால் முந்தைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நிறைய ஸ்வீப் ஷாட் ஆட முயற்சித்து அவுட்டானேன். ஆனால் இன்றைய போட்டிக்கு முன் தோனி என்னிடம் வந்து “அவர்கள் (டெல்லி பந்து வீச்சாளர்கள்) உங்களுக்கு புல் லென்த் பந்துகளை அதிகமாக வீசுவார்கள் என நினைக்கிறேன். அதனால் ஸ்வீப் ஷாட் அடிக்காமல், நேராக அதிரடியாக அடித்து ஆட முயற்சி செய்யுங்கள்” என கூறினார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது’ என டெவோன் கான்வே கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8